தமிழரசுக் கட்சி தனது அடையாளத்தை இழந்து, பாதி சிங்களமும், பாதி தமிழும் கொண்ட கட்சியாக மாறிவிட்டது என புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு (Tamil Diaspora) தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு நேற்று (15) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பாதி தமிழும், பாதி சிங்களமும் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்த நாட்டில் சிங்கள மேலாதிக்கத்தை ஆதரிக்கின்றனர்.
உதாரணத்திற்கு, லக்ஷ்மன் கதிர்காமரை (Lakshman Kadirgamar) பார்க்கவும். அவர் ஒரு சிங்கள நாட்டுப்பற்றாளர் பெண்ணை மணந்து, சிங்கள தலைவர்களை குறிப்பாக போர்க் குற்றவாளிகள், கொள்ளையர்கள், மற்றும் மிக மோசமான ஊழல் செய்பவர்களை மகிழ்விக்க தனது முழு வாழ்க்கையையும் செலவிட்டார்.
நாம் இந்த தமிழரசுக் கட்சியினரை தமிழர்களின் பிரதிநிதியாக அனுப்பினால், தமிழர்களுக்கு என்ன நடக்கும்? அதற்கான பதில் எங்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. தமிழரசு எப்படி சிங்களமாகி விட்டது என்று விரிவாக பேச தேவையில்லை.
இந்த கட்சியில் தன்னைத் தானே தமிழரசு தலைவர் என்று கூறிக்கொள்ளும் சுமந்திரன் (M. A. Sumanthiran), ஐந்தாவது வயதிலிருந்தே சிங்களவர்களிடம் வாழ்ந்தது தனது அதிர்ஷ்டம் என்று பெருமை பேசினார். அதாவது, தமிழர்களிடம் அவருக்கு தொடர்பு இல்லை என்பதற்குத் தகுந்த ஆதாரம்.
மேலும், தனது இரண்டு குழந்தைகளும் சிங்களவர்களை திருமணம் செய்ய அவர் உற்சாகப்படுத்தியதை, அதனால் தற்போது அவர் தனது பாதி சிங்கள பேரக்குழந்தைகளுக்கு தன்னுடைய நாட்டுப்பற்றுள்ள தாத்தாவாக இருப்பதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
சாணக்கியன், இந்திரபாலா, யசீந்திரா போன்ற பலரும் பாதி சிங்களர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். இதுபோன்று இன்னும் பலரை பட்டியலிடலாம், ஆனால் இதனை இங்கேயே நிறுத்துவோம்.
பாதி தமிழரும், பாதி சிங்களவரும் சிங்கள மேலாதிக்கத்தை ஆதரிக்கின்றனர். லக்ஷ்மன் கதிர்காமரை மாதிரி, ஒரு சிங்கள நாட்டுப்பற்றாளர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, ஊழல்மிக்க சிங்கள தலைவர்களை மகிழ்விக்க தன்னுடைய வாழ்நாளையே செலவிட்டார்.
இம்முறை “வீடு”க்கு வாக்களிக்கும் முன்பு, நமது முடிவுகளைப் பொறுத்தவரை சிறிது யோசிக்க நேரம் வந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.