Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை!

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் வசித்து வந்த சீக்கியர் பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இவ்விவகாரத்தினால் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டில்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் ஊடகவியலாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “எல்லாம் மேசையில் உள்ளது“ என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.

இந்நிலையில், கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார்.

இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
Next Post
இலங்கையில் பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிப்பு

இலங்கையில் பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு