முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தொடர்பாக முக நூல் பக்கத்தில் பொய்யாக பதிவிடப்பட்ட செய்திகள் தொடர்பாக முக நூல் நிறுவனத்தின் உண்மையை ஆராயும் குழுவுக்கு சிறிதரன் அவர்கள் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் முக நூல் நிறுவனத்தின் உண்மையை ஆராய்ந்தறியும் குழு முறைப்பாடு செய்யப்பட்ட முகப்புத்தகங்களின் கணக்குகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிந்து குறித்த முக நூல் பக்கங்கள் ஊடக பதிவிடப்பட்டிருந்த தகவல்களை ஆதாரமற்ற பொய்த் தகவல்கள் என உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை தனது உத்தியோக பூர்வ இணையத்தில் வெளியிட்டிருந்தது.
குறித்த செய்திகள் பிழையான செய்திகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின் குறித்த செய்திகள் மீது பிழையானது என வெளிப்படுத்தி முக நூல் குழு அறிவித்திருக்கின்றார்கள்.
மேற்குறித்த முக நூல் பக்கங்கள் உருவாக்கி உறுதிப்படுத்த பொது நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
குறிப்பாக யாழின் பிரபல விருந்தினர் விடுதி ஒன்றின் இலக்கமும், கத்தோலிக்க தேவாலயத்தின் இலக்கமும் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த பக்கங்களில் பதிவிடப்பட்ட முகவரிகளும் பொய்யானவையென தெரியவந்துள்ளது.
அதேசமயம் டிக்டொக் பக்கத்தில் பதிவிடப்பட்ட பொய்யான செய்திகள் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த வீடியோக்களை டிக்டொக் நிறுவனமும் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த செய்திகளை பரப்பியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது இலங்கை பொலிஸின் சைபர் கிரைம் தலைமையகத்தில் முறைப்பாடொன்றும் சிறிதரன் அவர்களால் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.