ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையிலான ஒரு தீர்வை நாங்கள் முன்மொழிகிறோம் என மக்கள் சிந்தனை மையம் ஒரு வரைபு மூலமான அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று (09)மட்டக்களப்பு East Lagoon ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்-
வடக்கு, கிழக்கை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்கும் திம்புக் கோட்பாடுகளை அமுல்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கூட்டாக நிர்வகிக்கப்பட வேண்டும்.இலங்கையில் இது வரை காலமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்னும் போர்வையில் வடகிழக்கில் வாழும் அணைத்து இன மக்களும் பெரும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.இந்த விடயம் தீரவேண்டும் என்றால் தற்போதைய ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக கூட்டாட்சி முறைக்கு இடமளிக்கும் பாராளுமன்ற முறைமைக்கு மாற்றப்படவேண்டும் அது இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும்.
சமூக மற்றும் வரலாறு சார்ந்த இன,மத மோதல்களை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் சர்வதேச ரீதியிலான குறிப்பாக ஐ.நா சபையினால் பரிந்துரைக்கப்பட்ட உடன்படிக்கைகள் அவசியம் எனவும் இது தொடர்பில் 05 ஆண்டுக்குள் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையவில்லை என்றால் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அவர்களின் சுயநிர்ணய உரிமையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்கும் வகையில் வாக்கெடுப்பு ஒன்றும் நடாத்தப்படவேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. இதில் சிவகுரு ஆதீனத்தின் தலைவர் தவத்திரு வேலன் சுவாமிகள்,திருகோணமலை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ,கிழக்கு பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் திருமதி.புளோரிடா சிமியோன்,யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் விரிவாக தெரிவிக்கையில்