சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது.
2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி ஆயுததாரிகளால் நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
போர்க்காலத்தின் போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் இருந்து சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளராக செயல்பட்டு வந்திருந்த நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, ம. நிமலராஜனின் திருவுருவப்படத்துக்கு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.