Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு

2 years ago
in செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்திற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று (23) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்க தூதுவர் காணி விடுவிப்பு தொடர்பாக விபரங்களை ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன எனவும், அவற்றை தீர்ப்பதற்கு தற்போது உள்ள அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்ததுடன் ஆளுநரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பரகாருக்கும் லண்டனில் காணாமல்போன வாகனமொன்றிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளது; பொலிஸ் பேச்சாளர்

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பரகாருக்கும் லண்டனில் காணாமல்போன வாகனமொன்றிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளது; பொலிஸ் பேச்சாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு