முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பரகாருக்கும் லண்டனில் காணாமல்போன வாகனமொன்றிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் அமைச்சரின் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ஆடம்பர கார் லண்டனில் திருடப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பிட்ட வாகனம் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக இன்டபோலின் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
இந்த வாகனத்திற்கும் 2021 இல் லண்டனில் காணாமல்போன வாகனத்திற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், இன்டபோல் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் இது குறித்து விசாரணை செய்துள்ளனர்.
இரண்டு வாகனங்களின் செசிஸ் மற்றும் இயந்திரங்களின் இலக்கங்களிற்கு இடையில் தொடர்புள்ளது,இதனை அடிப்படையாக வைத்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன.
முன்னாள் அமைச்சரின் ஆடம்பர வாகனம் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டது என்பதை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்