மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்றைய தினம்(25) காலை 7.30 மணியளவில் நடைபெற்றிருந்தது.
குறித்த டெங்கு ஒழிப்பு நடைபவனியானது சுகாதார கழக வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை அதிபர் திரு.த.மணிவண்ணன் தலைமையிலும், உடற்கல்வி ஆசிரியர் திருமதி.ம.சங்கர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திருமதி.கி.குஹேந்திரா என்பவர்களின் ஒழுங்கமைப்பில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .
இவ் ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்களினால் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், டெங்கு ஒழிப்பு சம்பந்தமான பதாதைகள் காட்சிப்படுத்தல், வீதி நாடகம் என்பன இடம்பெற்றன.
பாடசாலையிலிருந்து குறித்த நடைபவனியானது ஆரம்பமாகி மாமாங்கேஸ்வரர் ஆலய வீதி, உள்வீதி ஆகியவற்றினூடாக சென்று மீண்டும் பாடசாலையை அடைந்து நிறைவடைந்தது.
இதன் போது பொது சுகாதார பரிசோதகரால் மணவர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரை ஒன்றும் ஆற்றப்பட்டது.
அதேசமயம் இன் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர், என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.