Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு

நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு

2 years ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

நடிகர் சூர்யா விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என கங்குவா இசை வெளியீட்டில் நடிகர் போஸ் வெங்கட் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பங்கேற்ற நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்யா நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் தற்போது நவம்பர் 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையெ கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில், சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான சார் என்ற படத்தை இயக்கிய இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட், மேடையில் பேசும்போது, யூடியூப்பில் தற்போது அரசியல் தான் அதிகம் பேசப்படுகிறது. அதனால் இந்த மேடையில் கொஞ்சம் அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன். ஒரு நடிகர் தனது ரசிகர்களை வழிநடத்த வேண்டும். அதுவும் உங்களை போல் வழிநடத்த வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்களை பார்த்து கூறியுள்ளார்.

மேலும், தர்மம் செய்ய இப்போதே சொல்லிக்கொடுத்துவிட வேண்டும். உதவி மற்றும் மக்களின் பிரச்சனைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை இப்போதே சொல்லிக்கொடுத்துவிட வேண்டும்.

நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும், உங்களுக்கு அறிவையும், படிப்பையும் கொடுத்துவிட வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் எங்கிருந்து வேண்டுமானாரும் வரலாம். ஆனால் தலைவன் அவரது இரசிகர்களை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும்.

இரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை கொடுக்க வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். தமிழ் திரையுலகில் கமல்சாருக்கு அப்புறம், இவ்வளவு நுனுக்கமான ஒரு நடிகரை பார்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறீர்கள். நிறைய நடித்து எங்களுக்கு திருப்திகரமான திரைப்படங்களை கொடுத்த பிறகு நீங்கள் கட்டாயமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
“நந்தன்” திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

"நந்தன்" திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.