2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் நடைபெற்ற பந்துசேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கியதன் காரணமாக குறித்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதி தலைவராக காணப்பட்ட டேவிட் வோர்னருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஓராண்டுகாலத் போட்டித்தடை வழங்கப்பட்டதோடு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அணித்தலைவராக செயற்பட வாழ்நாள் தடையினையும் வழங்கியது.
இந்நிலையில் தற்போது 37 வயது நிரம்பிய டேவிட் வோர்னருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் அணித்தலைவர் தடை நீக்கப்பட்டுள்ளது.