இளம் பருவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநல சுகாதார மேம்பாடு தொடர்பாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால், உடற் கல்வி ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் நேற்று முன்தினம் (29) வழங்கப்பட்டன.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், மனநல மருத்துவ பிரிவு வைத்திய அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர்களின் ஏற்பாட்டில் இப் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஐந்து கல்வி வலயங்களில் இருந்தும் 35 உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். கல்வி, சுகாதார துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு,பாடசாலை சூழல்களுக்குள் மனநலம் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் சார்ந்த சிக்கல்களைத் தடுத்தல், முற்கூட்டிய பரிந்துரைகள் தொடர்பிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வளவாளர்களாக மனநல மருத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் அருள்ஜோதி, மனநல மருத்துவ மைய வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சௌந்தரராஜன் உட்பட மனநல மருத்துவ வைத்திய பிரிவு வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.