தற்போது தமிழ் மக்கள் முன்னால் உள்ள கேள்வி யாருக்கு வாக்களிப்பது என்பது.
ஏனெனில் மக்கள் மிகவும் குழம்பி போய் இருக்கிறார்கள்.
அரசியல் அனுபவமோ ஞானமோ இல்லாத நிலையில் தான் பெரும்பாலான மக்கள் இதுவரையில் வாக்களித்து வந்திருக்கிறார்கள். வளமையாக பிரபல்யமான கட்சிக்கு வாக்களிப்பது.
தெரிந்தவர்க்கு வாக்களிப்பது.
ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை வைத்து வாக்குகளை வழங்குவது.
தற்போது பிரதானமாக சமூக ஊடகங்களில் வெளிவரும் கருத்துக்களின் அடிப்படையில் வாக்களிப்பது என்பதுதான் பெரும்பாலான மக்களுக்கு பழகி போன விடயமாகும்.
உண்மையில் தற்போது வேட்பாளராக முன்னிற்கும் மனிதர்களையும் அவர்கள் சார்ந்த கட்சிகளையும் குழுக்களையும் அவதானித்து நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து இதுவரையில் தமிழ் மக்களுக்கு இந்த கட்சிகளும் குழுக்களும் என்ன நன்மைகள் என்ன தீமைகள் செய்தார்கள் என்பதை பகுப்பாய்வு செய்து வாக்களிப்பதற்கு நாம் முயல வேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்களுடைய விடயங்கள் தொடர்பாக அரசும் அல்லது வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டு தூதர்கள் இப்போ யாரை அழைக்கிறார்கள் யாருடன் ஆலோசிக்கிறார்கள் என்பதை யாவது சிந்தித்தால் எந்த கட்சிக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு இலகுவாக புரியும்.
பொதுவாக விடயம் தெரிந்தோர் இப்படித்தான் சிந்திக்கிறார்கள் மக்களும் அவ்வாறே சிந்தித்து முடிவெடுத்து வாக்களியுங்கள்.