கொழும்பு பங்கு பரிவர்த்தனையின்(CSE ) மட்டக்களப்பு கிளை CSE தலைவர் டில்ஷான் வீரசேகரவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிளையானது CSE இன் 10ஆவது பிராந்திய அலுவலகமாகும். இது தற்போது மாத்தறை, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், இரத்தினபுரி, அம்பலாந்தோட்டை மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் கிளைகளை பராமரிக்கிறது.
மட்டக்களப்பு பிராந்தியத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் Bartleet Religare Securities மற்றும் Softlogic Stockbrokers (PVT) Ltd வழங்கும் பங்குத் தரகர் சேவைகளைப் பெற முடியும் என CSE தெரிவித்துள்ளது.
கிளை வழங்கும் சேவைகளில், CDS கணக்குகளைத் திறப்பதற்கான வசதி, கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் மூலம் முதலீட்டாளர் கல்வி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய தகவல்கள் மற்றும் பங்குத் தரகர் சேவைகளுக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.
CSE புதிய கிளை அலுவலகத்தை திறப்பதற்கு முன்னதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டக்களப்பில் முதலீட்டாளர் மன்றத்தையும் கடந்த வாரம் நடத்தியது.
மட்டக்களப்பு அரசடி சந்தியில் உள்ள மக்கள் வங்கியின் மேல் கட்டிடத்தில் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.