முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (22) முன்னிலையாகியுள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








