சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, சிறிய குற்றச்சாட்டுகளை காரணமாகக் கொண்டு அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது வருந்தத்தக்கது என தெரிவித்தார்.
இது மக்களுக்கு ஏற்கனவே தெளிவான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், “நாங்கள் மக்களை நேசிக்கிறோம் அதனால் மக்கள் இன்னும் எங்களை நேசிக்கிறார்கள்” எனவும் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.








