மலையக சமூகத்தினருக்கு இன்று (12) வீட்டு உரிமப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பதுளை – பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வின் போது மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனடிப்படையில், “இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்)

இந்நிகழ்வானது “2000 வீடுகளை கையளிப்பது அல்ல!”, ஆனால் 2000 காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே.
இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை.
கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களை திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே.
குறிப்பாக வேதனம் அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.








