கிரான், கரங்காளியடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று (12)
மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிரானின் சில பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறமை குறிப்பிடத்தக்கது.








