வாகரை பிரதேச செயலாக பிரிவின் காயங்கேணி கடற்கரையில் நேற்று (15) மாலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சடலமானது அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, கடலில் சடலம் ஒன்று மிதந்து வருவதை கண்ட பிரதேச மீனவர்கள் வாகரைப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.








