Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டபூர்வமான பூப்பந்தாட்ட சங்கம் ஒன்றே; விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டபூர்வமான பூப்பந்தாட்ட சங்கம் ஒன்றே; விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் உறுதி

7 months ago
in மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க தற்போதைய செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந் தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மட்டக்களப்பில் மாவட்டத்திற்கான பூப்பந்தாட்ட மாவட்டச் சங்கம் என்ற ஒரு அமைப்புச் செயல்பாட்டில் இருக்கவில்லை. இதற்கு முன்னர் வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க நிர்வாகமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்துடன் சேர்ந்து செல்ல முடியாது.

எனவே தாங்கள் தனித்து செயல்பட வேண்டும் என கூறிக்கொண்டு இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்துடன் நேரடியாக இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துக்கொண்டு முறையற்ற விதமாக 2025 மே மாதத்தில் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் உடன் சேர்ந்து கொண்டு தனியாக தங்களது மாவட்டச் சங்கத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்தனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கமானது ( (EPBA) ) மட்டக்களப்பு மாவட்டச் சங்கத்தின் நிர்வாகத்திற்கு தெளிவான விளக்கங்களைக் கூறி, யாப்பின் படி நடக்குமாறு கேட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல், நாங்கள் தனித்துதான் செயல்படுவோம் என்று முறையற்ற விதத்தில் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் புது நிர்வாகத்தின் பிழையான உதவியுடன் தங்களது மாவட்டச் சங்கத்தைப் பதிவு செய்ய முற்பட்டனர்.

இதற்கு இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைமை அனுமதியளிக்க முற்பட்ட போது, அவர்கள் செய்வது தவறு என கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்க நிர்வாகம் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை கூட்டத்தில் விவாதித்து, இந்தப் பதிவுக்கு இடைக்காலத் தடையை ஏற்படுத்தியது

இந்த முறையற்ற விஷயத்தை இலங்கை விளையாட்டு அமைச்சுக்கு ( (Sri Lanka Sports Ministry) ) கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்க நிர்வாகம் தெரியப்படுத்தியது அதன் பிற்பாடு, விளையாட்டு அமைச்சினால் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான விசாரணையில் அவர்கள் செய்தது தவறு என கண்டறிந்தது.

இதனையடுத்து கிழக்கு மாகாணச் சங்கத்தின் சிபாரிசு இல்லாமல் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏதாவது மாவட்ட சங்கங்கள் கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதை செல்லுப டியற்றதாக்குமாறு மேன்முறையீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அந்த சங்கம் செல்லுபடியற்றது என 20.11.2025 திகதி கடிதம் அனுப்பியுள்ளது

எனவே கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டலுடன் மட்டக்களப்பில் செயற்படும் Batticaloa District Badminton Association (BDBA) ) மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அதன் தலைவராக கே.சுரேஸ், செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந், பொருளாளராக ஏ.ஏ.எம்.அஸீம் ஆகியோர் தற்போதைய நிர்வாகத்தினர் என அறியத்தருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது
செய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

June 23, 2026
மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை
காணொளிகள்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

June 23, 2026
நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

June 23, 2026
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!
செய்திகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

June 23, 2026
சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா
காணொளிகள்

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

June 23, 2026
களுவாஞ்சிகுடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் போராட்டம்
செய்திகள்

களுவாஞ்சிகுடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் போராட்டம்

June 22, 2026
Next Post
கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.