இலங்கையின் தென் மாகாணத்தில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுகள் காரணமாக அங்கு வசிக்கும் பலர் பயமும் சந்தேகமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர்.
கடந்த சில நாட்களில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் இதற்குக் காரணமாகியுள்ளன. இந்த கொலைகளுக்கு பதிலடி தாக்குதல்கள் எப்போது நடக்கும் என்ற அச்சத்தால் மக்கள் அஞ்சி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மற்றொரு பெரும் கொலைத் தாக்குதலை தடுக்க மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளால் முடிந்ததுள்ளமை பாராட்டத்தக்கது. அது தடுக்கப்படாமல் இருந்திருந்தால் குறைந்தது பத்து–பதினைந்து பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தாக்குதலை தடுக்க முடிந்தது ரொஹான் ஒலுகலவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் காரணமாகும். விசாரணைகளில் திறமையான அதிகாரியான அவர் தகவல் தந்த நபரிடம் இருந்து அனைத்து தகவல்களையும் சரியாக பெற்றார்.
“சேர்… மிதிகம ஹோட்டலில் நாளை இரவு ஒரு பார்ட்டி இருக்கு. அதுக்கு வெள்ளையர்கள் (வெளிநாட்டவர்கள்) தான் நிறைய பேர் வராங்க. அதே நாள்தான் ஹோட்டல் உரிமையாளரின் பிறந்தநாளும்.”
“ அப்போ உரிமையாளரின் குடும்பத்தார் எல்லாரும் வருவாங்க. அந்த குடும்பத்தையெல்லாம் ஒரே தடவையில் கொல்ல கொன்ட்ராக்ட் குடுத்துருக்காங்க.” இந்த தகவலை கேட்ட ஒலுகல மேலும் விவரமாக விசாரித்தார்.
தகவல் அளித்தவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொன்ட்ராக்ட் எடுத்தவங்க மிதிகம கபுவத்த பகுதியில் இருக்காங்க. அவங்க பிடிக்கப்படலன்னா அந்த ஹோட்டல் பார்ட்டிக்கு போய் பெரிய அளவிலான கொலை செய்யப்போறாங்க சர்…”
இதைத் தொடர்ந்து ஒலுகல மற்றும் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று தகவல் சரியா என்று உறுதி செய்தனர்.
தகவல் உண்மையென தெரிந்ததும், அதிகாலை வேளையில் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். வீடு உள்ளிருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், ஒருவரை பிடிக்க முடிந்ததுள்ளது.

விசாரணையில் அவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஓர் சிப்பாய் என்றும் தங்காலையில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது. வீட்டைச் சோதனை செய்தபோது T-56 துப்பாக்கி, 30 குண்டுகள், மெகசின், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடைத்தது.
ஓலுகல: “உனக்கு யார் கொன்ட்ராக்ட் குடுத்தாங்க?”
பிடிபட்டவர்: “சேர்… எனக்கு கொன்ட்ராக்ட் குடுத்தது துபாய்ல இருக்கிற ‘ஆமி சூட்டி’.“
“மிதிகம ஹோட்டலில் நாளை பார்ட்டி இருக்கு. அதுக்கு 200க்கு மேல் வெள்ளைக்காரங்க வருவாங்க. அதே நாள்தான் உரிமையாளரின் பிறந்தநாளும். அவரும் அவரோட மனைவியும் குடும்பத்தாரும் எல்லாரும் வருவாங்க. அவங்களைத்தான் கொல்ல சொல்லிருக்காங்க. ஆனால் பார்ட்டிக்குள்ள வந்த வெள்ளைக்காரர்கள் எல்லாம் போன பின் தான் தாக்கணும். உரிமையாளரின் குடும்பத்தில் ஒருத்தரையும் விட்டுவைக்கக்கூடாது.”
ஓலுகல:
“அதுக்காகவா T-56 வை வைத்து ரெடி இருந்தியா?” “ஆம் சார்.”
அவர் மேலும் கூறினார்:
“சார், இன்று நீங்க வரலன்னா நாங்களும் இன்னொருவரும் இந்த வீட்டுலிருந்து ஹோட்டலுக்குப் போய் தாக்கணும் என்று ரெடி ஆயிருந்தோம்.”

ஒலுகலா:
“இன்னும் உங்க கூட யார் யார் இருந்தாங்க?”
அவர்:
“சர் இரண்டு வெபன்ஸ் (ஆயுதங்கள்) வைத்து தாக்கணும் என்று சொன்னாங்க. எல்லாரையும் கொல்லணும். பின்பு ஒரு குண்டும் போடணும் என்றும் சொன்னாங்க.”
பின்னர் துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் சந்தேகநபரை கைது செய்து, அவர்களை உடனடியாக மூன்று மாடி ஹோட்டலுக்கு சென்றனர் பொலிஸார்.
அங்கு பார்ட்டியில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் ஏற்கெனவே சென்றுவிட்டனர். உரிமையாளரின் குடும்பத்தார் நித்திரையில் இருந்தனர்.
ஒலுகல உரிமையாளரிடம் கூறினார்:
“நாங்கள் வரலன்னா உங்களுக்கு இப்படி தூங்க முடியாது.”
சம்பவத்தை கேட்ட ஹோட்டல் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அவர்,
“எங்களுக்கு ஒன்றுமே தெரியல சர். நேற்று என் பிறந்தநாள். அதுக்கே பார்ட்டி வைத்திருந்தோம்.”
ஒலுகல தாக்குதலுக்குத் தயாரான துப்பாக்கியாளர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.
ஹோட்டல் உரிமையாளர் கூறினார்:
“சார், உண்மையிலேயே எங்களின் உயிர் காப்பாற்றியது நீங்கள் தான்.”
அவர் மேலும் சொன்னார்:
“பார்ட்டிக்கு 200க்கும் மேல் வெளிநாட்டவர்கள் இருந்தாங்க. எங்கள் குடும்பத்தாரும், பவுன்சர்களும் (பாதுகாவலளர்கள்), நண்பர்களும் இருந்தாங்க. என்ன நடந்திருந்தாலும்கூட குறைந்தது 10–15 பேர் கொல்லப்பட்டிருப்பாங்க.”
சந்தேகநபரை பின்னர் வெலிகம பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.








