மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் தேற்றத்திவை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்ரமணியம் நேசத்துறை என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் எந்த காரணத்தினால் உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








