Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயார்

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயார்

5 months ago
in செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வுக்கான விவாதங்களை தீர்மானிக்கும் “பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம்” ஏன் இந்த வாரம் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிமல் ரத்நாயக்க, இரண்டு முக்கிய சட்டவாக்கங்கள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக அரசு காத்திருப்பதாகக் கூறினார். அத்துடன், எதிர்க்கட்சியினர் தயாரித்து வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிலையியற் கட்டளைகளின்படி முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதால், அதனையும் கருத்திற் கொண்டு கூட்டத்தை நடத்த அரசாங்கம் காத்திருப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வு நாட்களிலேயே விவகாரக் குழுக் கூட்டத்தை நடத்துவதுதான் வழமையான நடைமுறை என்று சுட்டிக்காட்டிய கயந்த கருணாதிலக்க, விவாதங்களுக்குத் தயாராவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில், விவகாரக் குழுக் கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்று பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
Next Post
தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம்

தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு