Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுதந்திர தினத்தை ‘கருப்பு நாளாக’ அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு அழைப்பு; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சுதந்திர தினத்தை ‘கருப்பு நாளாக’ அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு அழைப்பு; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து இந்த கருப்பு நாள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அந்தவகையில் 04ஆம் திகதி வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10.00 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரே வழி கல்வியாகத்தான் காணப்படுகிறது. எங்களது மக்களின் நலனுக்காகவே நாங்கள் பல்கலைக்கழகம் சென்றோம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் என்ன காரணத்திற்காக பல்கலைக்கழகம் சென்றோமோ அந்த காரணம் தற்போது பின்னோக்கி செல்லப்படுகிறது.

ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு – கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டே இருக்கின்றனர். உங்களது ஆக்கிரமிப்புகளை எந்த அளவிற்கு விரைவாக நிறுத்துகின்றீர்களோ அந்த அளவிற்கு தான் இந்த நாட்டினை ஒன்றாக மாற்ற முடியும்.

அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வதொன்று. இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலையில் செல்லலாம். எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை
காணொளிகள்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

June 23, 2026
ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!
செய்திகள்

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

June 23, 2026
நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

June 23, 2026
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!
செய்திகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

June 23, 2026
சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா
காணொளிகள்

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

June 23, 2026
ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

June 23, 2026
Next Post
களுத்துறையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் சார்ஜன்ட் மரணம்

களுத்துறையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் சார்ஜன்ட் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு