Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும கொடுப்பனவு; 5209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாக அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு; 5209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாக அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

7 இலட்சம் அஸ்வெசும மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக அஸ்வெசும திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் தகுதியற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 5,000 என பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான 640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலித்ததன் பின்னர், புதிதாக 300,000 குடும்பங்கள் அஸ்வெசுமவில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அஸ்வெசும பலன்களைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதேசமயம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக, இதுவரை நிவாரணம் பெற்றுக் கொண்டிருந்த 5,209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாகவும், மேலும் 2,567 குடும்பங்கள் தாங்கள் பெறும் சலுகைகளின் மட்டத்திலிருந்து கீழே சென்றுள்ளனர் எனவும் மேலும் 50,882 பேர் தமது சலுகை மட்டத்தை உயர்த்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறக்குறைய 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை விரைவில் பரிசீலித்து நிறைவு செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்
செய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்

June 24, 2026
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செய்திகள்

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

June 24, 2026
கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்
செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்

June 24, 2026
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!
செய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

June 24, 2026
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு
உலக செய்திகள்

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

June 24, 2026
Next Post
சத்திரசிகிச்சை விவகாரம்; வைத்தியரை மிரட்டிய சுகாதார பணியாளர்கள்!

சத்திரசிகிச்சை விவகாரம்; வைத்தியரை மிரட்டிய சுகாதார பணியாளர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு