Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச வைத்தியசாலைகளில் இலவச உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

அரச வைத்தியசாலைகளில் இலவச உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரசாங்க மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச உணவில் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக அதிகரிக்கும் கஸ்டங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதி பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்பட்டும் கட்டண அதிகரிப்பு காரணமாகவே அதிகளவு மக்கள் அரசமருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நோயாளிகள் இலவச உணவை கேட்பது குறைவு. அவர்களை வந்து பார்ப்பவர்களிடமிருந்து உணவு கிடைப்பதும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள முக்கியமான அரசாங்க மருத்துவமனையின் அதிகாரியொருவர் ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது பலர் தற்போது இலவச உணவை நம்பியுள்ளனர்.

மேலும் நோயாளிகளை பார்வையிட எவரும் வருவதும் இல்லை. மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன, உணவுப்பொருட்களின் தரங்கள் குறைவடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவை விநியோகிப்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது குறித்து சிந்திப்பார்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

June 21, 2026
இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
செய்திகள்

இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

June 21, 2026
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச
செய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

June 21, 2026
Next Post
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சாரதி உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சாரதி உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு