Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச பயங்கரவாதத்திற்கு மட்டுமே இந்த அரசாங்கம் கெட்டித்தனமானது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு!

அரச பயங்கரவாதத்திற்கு மட்டுமே இந்த அரசாங்கம் கெட்டித்தனமானது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மற்றொரு சமூக சேவை நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படும் நாட்டில், கண்ணீர்ப்புகை, தோட்டாக்கள் மற்றும் நீர்த்தாரைகளுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பணம் செலவிடப்பட வேண்டுமா, இல்லை என்றால் ஆசிரியர் பற்றாக்குறையையும் வளப்பற்றாக்குறையையும் தீர்த்து கல்வித்துறையைக் கட்டியெழுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 73 ஆவது கட்டமாக,மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச பயங்கரவாதம்,அரச மிலேச்சத்தனம்,

அரச வன்முறை,அரச கெடுபிடிகள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது. 220 இலட்சம் மக்களுக்காக வேண்டி,அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் வீதியில் பேராட்டம் நடத்தினாலும்,சட்டவிரோத அரசாங்கத்தின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

மக்களால் தெரிவு செய்யப்படாத,மக்கள் ஆணை இல்லாத,சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத அரசாங்கமே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையில்லாமலயே ஆட்சியை நடத்தி வருகிறது.

கண்ணீர் புகை, குண்டாந்தடிகள், பொலிஸ் மிரட்டல், அரச பயங்கரவாதம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக,

நாட்டிலுள்ள 10,126 பாடசாலைகளில் கற்கும் 41 இலட்சம் மாணவ மாணவிகளின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்துங்கள். குறைபாடுகள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கனம் செலுத்துங்கள்.

நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக வேண்டி, உரத்து குரல் எழுப்பிய மக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்திற்கு மட்டுமே இந்த அரசாங்கம் கெட்டித்தனம்.

இந்த அரசாங்கம், வருடத்தின் 365 நாட்களும் அரச வன்முறை, அரச பயங்கரவாதம், அரச மிருகத்தனத்தை பிரயோகித்து மக்களின் வாயை மூடச் செய்யும் விடயத்திலயே கெட்டித்தனம் காட்டி வருகிறது.

மக்கள் சக்தி அரசாங்கத்தில்,கல்விச் சுதந்திரம் உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டு, எந்த சவாலையும் எதிர்கொண்டு,உலகிற்கு ஏற்ற உயர்தர கல்வி முறையை ஸ்தாபித்து, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்

தொடர்புடையசெய்திகள்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
செய்திகள்

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

June 24, 2026
தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!
செய்திகள்

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

June 24, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

June 24, 2026
Next Post
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் விரிவுரை பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் விரிவுரை பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.