Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் விரிவுரை பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் விரிவுரை பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று புதன்கிழமை (31) முதல் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் சசிந்த பண்டார தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் உடனடியாக ‘வற்’ வரியை குறைக்க வேண்டும். உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக பலர் சிரமப்படுகின்றனர்.

விலையேற்றத்தை உடன் குறைக்க வேண்டும். சிற்றுண்டிச்சாலைகளின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். புதிய மாணவர் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச்சட்டம், நிகழ் நிலை காப்புச்சட்டம், சமூக கவளைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் போன்ற அண்மைகாலமாகக் கொண்டு வரப்பட்ட அனைத்து புதிய சட்டங்களையும் மீளப் பெற்று, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

மகாப் பொல பாக்கிப் பணம் செலுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

நியாயமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புத் தடைகள் நீக்கப்பட வேண்டும்.

சி.சி.டி.வி. களைப் பொருத்தி அதன் மூலம் மாணவர்களது நடவடிக்கைகளை உளவு பார்க்கும் நிலை நீக்கப்பட வேண்டும்.

இலவச கல்வி, இலவச சுகாதாரம் போன்ற துறைகளை ஒழிக்கும் தனியார் கல்விக்கடைகளை உருவாக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும்.

கல்விக்கான அரச நிதி 6 சதவீதமாக ஒதுக்கப்பட வேண்டும் முதலான பல்வேறு காரணங்களை முன் வைத்து தாம் விரிவுரைகளைப் பகிஷ்கரிப்பதாக எழுத்து மூலம் உபவேந்தருக்கு அறிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச
செய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

June 24, 2026
“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
Next Post
நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள்!

நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு