Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள்!

நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள்!

2 years ago
in செய்திகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று (31) மன்னார் நீதி மன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மன்றில் நேற்று (31) 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.

பணிப்பாளரின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்ட மை, மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் படகிற்கு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.

இதன் போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 18 பேர் கடந்த 16 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 கடற்தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் 17 ஆம் திகதி புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!
செய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

June 24, 2026
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு
உலக செய்திகள்

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

June 24, 2026
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 24, 2026
வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!
செய்திகள்

வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!

June 24, 2026
பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!

June 24, 2026
வடக்கு கிழக்கில் இல்மனைட் அகழ்வு; அரசு மீண்டும் ஆரம்பிப்பதற்கான காரணம்?; சாணக்கியன் கேள்வி
அரசியல்

வடக்கு கிழக்கில் இல்மனைட் அகழ்வு; அரசு மீண்டும் ஆரம்பிப்பதற்கான காரணம்?; சாணக்கியன் கேள்வி

June 24, 2026
Next Post
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய வெளிநாடு செல்ல தடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய வெளிநாடு செல்ல தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு