Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடா செல்ல சென்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கனடா செல்ல சென்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

2 years ago
in செய்திகள்

போலி கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவினர் இன்று (16) காலை கைது செய்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கத்தாரின் தோஹா நோக்கிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளனர்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இலங்கை ஏர்லைன்ஸ் கவுன்டர்களில் போலி கனேடிய கடவுச்சீட்டை சமர்ப்பித்து தோஹா சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் மாலைத்தீவு செல்வதாக கூறியுள்ளார்.

இதன்போது அவரிடம் நடத்திய விசாரணையில், கனடாவில் உள்ள உறவினர் ஒருவர் தனக்கு உதவியதாகவும், கனடாவில் உள்ள நபர் இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை கொடுத்து இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கத்தார் எரிவாயு விநியோக தள வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கத்தார் எரிவாயு விநியோக தள வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

June 23, 2026
அநுர ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் 98 ரூபாய் திருடுகிறார்; சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
செய்திகள்

அநுர ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் 98 ரூபாய் திருடுகிறார்; சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

June 23, 2026
ரணிலின் லண்டன் பயண விவகாரத்தை விசாரிக்க பெருந்தொகை செலவு; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
செய்திகள்

ரணிலின் லண்டன் பயண விவகாரத்தை விசாரிக்க பெருந்தொகை செலவு; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

June 22, 2026
முன்பள்ளி மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக நகைகள் திருடிய பெண் ஊழியர் கைது
செய்திகள்

முன்பள்ளி மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக நகைகள் திருடிய பெண் ஊழியர் கைது

June 22, 2026
களுவாஞ்சிகுடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் போராட்டம்
செய்திகள்

களுவாஞ்சிகுடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் போராட்டம்

June 22, 2026
பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு
உலக செய்திகள்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

June 22, 2026
Next Post
பாகிஸ்தான் இராணுவ எல்லையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல்!

பாகிஸ்தான் இராணுவ எல்லையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு