Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி”; மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் இரத்ததான முகாம்!

“உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி”; மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் இரத்ததான முகாம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நேற்று முன்தினம்(21) நாடளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கான 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பிலும் இந்த நினைவேந்தலை ஒட்டித்தான நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், “உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி” எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் இரத்ததான நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்மேளனத்தின் தலைவர் சுஜீவாவின் தலைமையிலும், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், இளைஞர் சேவை அதிகாரி தயாசீலன் அவர்களின் வழிகாட்டுதலிலும் இவ் இரத்த தான முகாமானது தாண்டவன் பேடினன்ஸ் மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்குப் பிரதேச பிரதேச செயலாளர் வாசுதேவன், சிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, மற்றும் கௌரவ அதிதிகளாக தாண்டவன்வெளி காணிக்கை அன்னை திருத்தளத்தின் பங்குத்தந்தை Rev. Fr. பிராசிஸ் ஜூலியன், முன்னாள் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி R. பிரபீன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி A. தயாசீலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்திருந்தனர். இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

அதேசமயம் சான்றிதழ்களை ஏற்பாடு செய்த இருதயபுரம் கிழக்கு Youth In Action மற்றும் ஜெயந்திபுரம் முழுமதி இளைஞர் கழகத்திற்கும், மரக்கன்றுகளும் ஏற்பாடு செய்த நாவலடி இளைஞர் கழகத்திற்கும் மற்றும் இந் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சமமேளனம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வு!

தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு