Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில் முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில் தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
Next Post
குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!

குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு