இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாகக் கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மாத்தளையிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது, கவரக்குளம் பிரதேசத்தில் வைத்து பாரிய மரமொன்று ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ள நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கவரக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








