Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை; பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது!

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை; பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது!

2 years ago
in செய்திகள்

சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் நேற்று (25) சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.

சில வாரங்களுக்கு முன்னர் உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், விநியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது நேற்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியங்களை கொண்ட உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவித்தல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு