Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் வாள் வெட்டு குழுக்களை தெரிந்தும் கைது செய்யமுடியவில்லை; பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

யாழில் வாள் வெட்டு குழுக்களை தெரிந்தும் கைது செய்யமுடியவில்லை; பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது.

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்திக்குழுவினரால் கேட்கப்பட்டது.

இதற்கு தமிழ் பேசும் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் எவ்வித பொறுப்புமின்றி எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என பொறுப்பற்ற விதத்தில் சாதாரணமாக பதில் கூறினார்.

இப்பதிலினால் கோபமடைந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது அவர்கள் இங்கேதான் இருக்க வேண்டும் அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் சைபர் கிரைம் இயங்குகிறது.

அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும், அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை. ‘ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்’ என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில் என குறிப்பிட்டார்.

பொலிஸாரின் அசட்டைத் தனமான பதிலைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பொலிஸார் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அப்படியாயின் பொலிஸ் திணைக்களம் ஏன்? இயங்குகிறது. வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது. சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாள்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை. ஆட்களைத் தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது பொலிஸ் தரப்பிலே சந்தேகம் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
தொல்லை கொடுக்கும் உயரதிகாரிகளை இணையவழியில் விற்கும் ஊழியர்கள்!

தொல்லை கொடுக்கும் உயரதிகாரிகளை இணையவழியில் விற்கும் ஊழியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு