அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமித்துள்ளார்.
முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 43 வயதான துளசி கப்பார்ட், 2022ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார்.
2024ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்து பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார்.
இவர் 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார்.
மேலும், ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.