Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(18) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால்தான் அவரின் தலைமைப்பதவிக்கு எதிராகக்கூட கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பட்டு வருகின்றன.

தற்போது மட்டும் அல்ல தேர்தலுக்கு முன்பு இருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக்கருத்துகளை பரப்பி வந்தனர். அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையான் கட்சியுடன் எமக்கு கூட்டு என்ற கதையாகும்.

தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் எமக்கு டீல் கிடையாது.

என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம்கோர்த்து இருந்த நபர். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இவர்கள் ஒன்று சேரலாம். எனவே, சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என சாணக்கியன் போன்றவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதனால்தான் களவாணிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர். அந்த எதிர்பார்ப்பிலும் தற்போது மண்கவ்வியுள்ளனர். எனவே, சஜித்தின் தலைமைத்துவம் வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.