காத்தான்குடி றிஸ்வி நகரில் றஸ்மீ குழுவினர், கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்துடன் தாக்குதல் நடாத்திய குழு தப்பி ஓடியுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (16) இரவு இடம்பெற்றதுடன் அந்தபகுதில் பெரும் பதற்றத்தையடுத்து விசேட அதிரடிப் படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது பற்றி தெரியவருவதாவது,
காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி காரியாலம் கடந்த 6 ம் திகதி உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆதரவாளர்களுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது
இதனையடுத்து கடந்த 14 ம் திகதி இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையடுத்து புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் றிஸ்வி நகரில் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் மீது, அங்கு பொல்லுகள் வாள்கள் மற்றும் கத்தி கூரிய ஆயுதங்களுடன் சென்ற றமீஸ் குழுவினர் கத்தியால் அவர் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்ததையடுத்து அந்த குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவரை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனாவைத்தியசாலையழல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு தேர்தல் கண்காணிப்பு குழுவான கபே அமைப்பு சென்று கண்காணித்துள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்