தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் திகதி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இலங்கை தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அதன்பின், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து, கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரலாம் எனவும் எதிவுர் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் அதிக கவனம் எடுத்து தமது கடல் பயண நடவடிக்கைகளை தொடரும் படியும், தென்மேற்கு வங்காள விரிகுடா பக்கம் மீன்பிடிக்கு செல்லும் மக்கள் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இந்த நிலையை கருத்தில்கொண்டு அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.