புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன் ஆரம்பக்காகியுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்று (21) பிற்பகல் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இதன்போது சுமார் 27 பேர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.