மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராமத்தில் “சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர்” எனும் தொனிப் பொருளில் குடிநீர் வழங்கும் திட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த கிராம மக்களுக்கு நீண்டநாள் அடிப்படை தேவையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சனைக்கு வன்னி ஹோப்பை அமைப்பு, வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் குறித்த கடந்த 18 ம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் கடந்த காலத்தில் குடிநீரை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொண்டுவந்த அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய சமூக நீர் வளங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலே பிரஜா ஜல அபிமான வேலை திட்டத்தின் கீழ் இந்த குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மக்களினுடைய பங்களிப்பு போதாத நிலையில் இடைநடுவில் சில குறைபாடுகள் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இத்திட்டத்தை பூர்த்தி செய்து மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைக்க வன்னி ஹோப்பை நிறுவனம் மற்றும் வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் ஆகியன முன்வந்து 25 இலச்சம் ரூபா நிதி அனுசரணையுடன் இந்த திட்டதை நிறைவு செய்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதில் அதிதிகளாக வன்னி ஹோப்பை அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், வைத்தியர் அரன் ஸ்ரீதரன், வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் ரவீந்திரன், சலோமிக்கா செல்வராஜா. கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான கணவதிப்பிள்ளை தவசீலன். திட்ட இணைப்பாளர் தனுராஜ் தேசிய சமூக நீர் வளங்கள் திணைக்கள பொறியளார் எஸ்.பிரதீபன். நிலைய பொறுப்பதிகாரி சுலக்சனா. அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவராஜன். தொழில்நுட்ப உத்தியோகத்தர் கபிசாந்தன் ஆகியேர் கலந்து கொண்டனர்
இதனையடுத்து நிர்மானிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் திட்டத்தை சம்பிராய பூர்வமாக அதிதிகள் நாடாவெட்டி மக்களின் பாவனைக்காக வழங்கிவைத்தனர்.