Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நேற்றைய தினம் (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நான் நியமிக்கப்பட்டதில் இருந்து பல சுகாதார தர மேம்பாடுகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளை மேம்படுத்த என்னை அர்ப்பணித்து வந்துள்ளேன். எனினும் கடந்த 19 ஆம் திகதி (19) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் துரதிஷ்டவசமாக மகப்பேறு மரணம் நிகழ்ந்துள்ளது.

குறித்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கையை முன்னெடுத்து வந்தேன்.
எனினும் மகப்பேற்று விடுதியில் புகுந்த கும்பல் பிரசவ அறைக்குள் நுழைந்து மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியது. நான் அங்கு சென்ற போது நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடினேன்.

எனினும் அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் குறி வைத்து சரமாரியாக தாக்க முயன்றனர். அவர்கள் என்னை கொலையாளி என்று கூறி கூச்சலிட்டனர். அவர்களில் சிலர் என்னைத் தாக்க முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மத்திய சுகாதார அமைச்சின் பிரதி நிதிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு மரணம் தொடர்பாக சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தோம்.

இதற்கிடையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஒரு பெரிய கூட்டம் அங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளி நோயாளர் பிராவுக்குள் நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் என்னை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

நான் எனது குடியிருப்பில் இருந்து 355 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பயணிப்பதால் இது எனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு எதிரான தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் எனக்கு எதிரான பிரச்சாரங்களின் போது கிளர்ச்சி மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே எனக்கு வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச்சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது.

தயவு செய்து எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயவு செய்து என்னை அவசரமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கவும். எனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்- என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்
செய்திகள்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

May 29, 2025
நிலாவெளியில் இராஜ இராஜ சோழர் கல்வெட்டு; ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பொதுமக்கள்!
செய்திகள்

நிலாவெளியில் இராஜ இராஜ சோழர் கல்வெட்டு; ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பொதுமக்கள்!

May 29, 2025
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு ஐஸ் போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது
காணொளிகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு ஐஸ் போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது

May 29, 2025
போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜுன் 6ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக BOC ஊழியர்கள் எச்சரிக்கை
செய்திகள்

போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜுன் 6ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக BOC ஊழியர்கள் எச்சரிக்கை

May 29, 2025
காத்தான்குடியில் புலிகளால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கும் தூபி அமைக்குமாறு எழுந்துள்ள குரல்!
காணொளிகள்

காத்தான்குடியில் புலிகளால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கும் தூபி அமைக்குமாறு எழுந்துள்ள குரல்!

May 29, 2025
அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநிதிகள் குழு பங்கேற்ப்பு
செய்திகள்

அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநிதிகள் குழு பங்கேற்ப்பு

May 29, 2025
Next Post
பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு