Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிலாவெளியில் இராஜ இராஜ சோழர் கல்வெட்டு; ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பொதுமக்கள்!

நிலாவெளியில் இராஜ இராஜ சோழர் கல்வெட்டு; ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பொதுமக்கள்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் இந்தியா கும்பகோணத்திலிருந்து வந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் கொண்ட குழிவினர் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவிலில் இருப்பது இராஜ இராஜ சோழர் கல்வெட்டுக்களில் ஒன்று என தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

முகப்புத்தக பதிவு ஒன்றையிட்டு குறித்த குழுவில் ஒருவரும், மகா சோழர்கள் வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவருமான உதய ஷங்கர் என்னும் ஆய்வாளர் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த பதிவில் தெரிவிப்பதாவது,

இன்று (24.5.2025) இலங்கையில் கடைசியாக பார்த்த கல்வெட்டு நிலாவெளி எனும் ஊரில் உள்ள ராஜராஜ சோழர் கல்வெட்டு தான். இதுவரை இலங்கையில் பார்த்த ராஜராஜர் கல்வெட்டுகளில் இது தான் காலத்தால் முற்பட்டது.

ராஜராஜரின் எட்டாவது ஆட்சியாண்டு அதாவது கி.பி.993 வருடத்தைய கல்வெட்டு. அப்போதே திருகோணமலையை சுற்றியுள்ள பகுதிகளும் சோழர்கள் வசம் வந்து விட்டதை இது காட்டுகிறது.

‘நிலாவெளி’ ஆகா என்ன அழகிய தமிழ்ப் பெயர். ஊரும் அழகு தான் அவ்வூர் மக்களும் அழகு தான். அங்குள்ள விநாயகர் கோவிலைத் தேடிச் சென்று கல்வெட்டைப் பார்த்த போது அங்கிருந்த மக்களெல்லாம் கூடி நின்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இத்தனை வருடம் இக்கோவிலுக்கு வருகிறோம் இது ராஜராஜர் கல்வெட்டு என்று தெரியவில்லை என அம்மக்களும் கோவிலின் அர்ச்சகரும் கூட பகிர்ந்துக் கொண்டனர். கல்வெட்டை படிக்க வீட்டிலிருந்து மைதா மாவு கொண்டு வந்து கொடுத்து உதவினர்.

கல்வெட்டுச் செய்தி: அவ்வூரின் 250 வேலி நிலம் அனைத்தும் கோணபர்வதத்தில் (திருகோணமலை) உள்ள மச்சகேஸ்வரத்தின் நீலகண்டனான சிவனுக்கு சொந்தமானதாகவும் அந்த நிலத்தின் பகுதிகளைக் குறிப்பிடும் போது கீரிகண்டகிரிகாமம், ஊரக்கிரிகாமம் என்றும் அதன் எல்லைகளாக கடலும், எட்டகாம்பே எனும் ஊரும், சூலக்கல்லும் குறிப்பிடப்படுகின்றன. திருகோணமலை அழகான தமிழில் “கோணபர்வதம்” எனக் குறிப்பிடப்படுவது கல்வெட்டின் தனிச்சிறப்பு!
சூரியன் மறைந்த பின்பு அவ்வூரைத் அடைந்துப் பின் கோவிலைக் கண்டுபிடித்து கல்வெட்டையும் படிக்க முடிந்ததில் நம் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சியே….😍😍😍
பல அற்புதமான சோழர் கல்வெட்டுக்களை இலங்கையில் தேடிக் கண்டறிய முடிந்த சிறப்பான நாளாக இன்று அமைந்ததற்கு ராஜராஜரின் ஆசியே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!❤❤❤

என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு