பாடசாலை விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டும் போதும், சுற்றுலா செல்லும் போது பழக்கம் இல்லாத நீர்த்தேகங்களில் நீராடும் போதும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு பிள்ளைகள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக சிறுவர்கள் குளிக்கும் போது ஆபத்தான இடங்களை தெரிவு செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.