Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய-தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இலக்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த அமைப்பு இன்று காலை 2.30 அளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்கே சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு மேலும் விருத்தியடைந்து தீவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக தீவின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35-45) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

WW2024112401E_mergedDownload
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
Next Post
வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது

வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு