அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்துவிழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று, கல்முனை பிரதான போக்குவரத்துத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் எதிர்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்துவீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன், குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர்.
இந்த பாலம் உடைப்பெடுத்துள்ள காரணத்தினால் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியுடனான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே பிரயாணிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுவருகின்றனர்.