இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தாழமுக்கத்திற்கான எதிர்வு கூறல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (28) அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 28 அதிகாலை 2.30 மணியளவில் வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் காணப்பட்டது.
இது இன்று (28) மெதுவாக வடமேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையை நெருங்கி மேலும் தீவிரமடைந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும், வட மாகாணத்திலும் திருகோணமலையிலும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
மேலும் வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலையிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
அதேசமயம் வரவிருக்கும் தீவிர காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறும், கடற்படை மற்றும் மீனவ சமூகங்களை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
.