Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 49,123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைதத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

இது தவிர சில நலம்புரி அமைப்புகளும் மேலதிகமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது. இம்மாவட்டத்தில் இறால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டவர்கள் இறால் பண்ணைகள் நீரில் மூழ்கி இருப்பதால் தமக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இந்த இறால் உற்பத்தியாளர்களின் சங்க இணைப்பாளர் மொஹமட் நஜீம் தெரிவித்தார்.

இதேவேளை போக்குவரத்து தடைப்பட்டுள்ள பட்டிருப்பு போரதீவு பாதையில் அத்தியாவசிய பணிகள் மற்றும் வைத்திய சேவைகளுக்காக பயணம் செய்யும் மக்களுக்காக உழவியந்திரங்கள் மற்றும் இயந்திரப் படகுகளில் பயணிப்பதற்கு கடல் படையினரும், சில தனியார் அமைப்புகளும் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போரதீவு பகுதியில் நீதிவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ள சிறார்கள் நலங்களை கவனிக்க களுவாஞ்சிக்குடி நீதிபதி ரஞ்சித் குமார் அப்பகுதிக்கு விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளை கேட்டு அறிந்தார்.

அதேசமயம் வெல்லாவெளி மற்றும் போரதீவு பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரத்தை சீர் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததன் அடிப்படையில் சகலபிரதேசத்திற்கும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்மீள வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
Next Post
மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு