கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு வெள்ளம் காரணமாக 6 கிராமசேவகர் பிரிவுகளுக்கான தரை வழிப் போக்குவரத்து பாதை பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தெரிவித்தார்.
அப்பிரதேச மக்களின் நன்மை கருதி போக்குவரத்து வசதிக்காக சந்திவெளி, கிரான் மற்றும் கிண்ணையடி துறைகளினூடாக விசேட படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ் படகுச் சேவைக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
புலிபாந்த கல் பாலத்தினூடாக வெள்ள நீர் வழிந்தோடுவதினால் கடந்த 5 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது.இதனால் மக்களின் தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரும் தமது உணவுப் பொருட்களை இடம் நகர்த்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்க்பட்ட மக்கள் 4 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்