நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (01) நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் 50 ஆகவும், முல்லைத்தீவில் 43 ஆகவும் மற்றும் மட்டக்களப்பில் 36 ஆகவும் காணப்படுகிறது.

இந்த நிலையில் வவுனியாவில் காற்றின் தரம் 52 ஆக சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகவும், அதிக உணர்திறன் உடைய மக்களை இது சற்று பாதிக்கும் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
