புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் நபர் ஒருவரை ரத்கம விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
41 கிராம் 19 மில்லிகிராம் எடையுடைய தங்கம் என சந்தேகிக்கப்படும் இந்த புத்தர் சிலையின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படாத நிலையில், நேற்று (3) விற்பனைக்கு தயாரான நிலையில் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் காலி வக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இப்புத்தர் சிலை தங்கமா என பரிசோதிக்கும் பொருட்டு காலி தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.